ஆசியர்களுக்கான ஆசிய வங்கியாக இருப்பதே இலக்கு: டிபிஎஸ் ‘சிஇஓ’

ஆசியர்களுக்கான ஆசிய வங்கியாக இருப்பதே இலக்கு: டிபிஎஸ் ‘சிஇஓ’

2 mins read
cb20e386-7c0b-4322-bbb3-ae314c36e418
கலந்துரையாடலின்போது பேசிய டிபிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி டான் சு ‌ஷான். - படம்: சாவ்பாவ்

தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ், உலகளாவிய வங்கியாக உருவெடுப்பதற்குப் பதிலாக ஆசிய கண்டத்துக்குள்ளே வளர்ச்சியடைவதில் கவனம் செலுத்தும் என்று அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி டான் சு ‌ஷான் தெரிவித்துள்ளார்.

சொத்து நிர்வாகம், கேப்பிட்டல் மார்க்கெட் சந்தைகள், வர்த்தகம் ஆகிய மூன்று அம்சங்களில் நிலைமை நன்றாக இருப்பதாக அவர் கூறினார்.

“நாங்கள் உலகளாவிய வங்கி அல்ல. சிட்டி, எச்எஸ்பிசி ஆகியவற்றைப் போல் உலக வங்கியாக நாங்கள் ஆவோம் என்று நினைக்கவில்லை. நாங்கள் ஆசியர்களுக்கான ஆசிய வங்கியாக இருக்க விரும்புகிறோம்,” என்று திருவாட்டி டான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) தெரிவித்தார். சிங்கப்பூர் பிரஸ் கிளப் நிலையம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசினார். எஸ்பிஎச் அறநிறுவனம் நடத்தும் உரையாடல் தொடரின் அங்கமாக அந்தக் கடந்துரையாடல் நடைபெற்றது.

பிஸ்னஸ் டைம்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் லீ சு ‌ஷியான் அந்தக் கலந்துரையாடலை வழிநடத்தினார்.

சொத்து நிர்வாகம்

ஆசியாவில் அதன் கட்டமைப்பை வளர்ச்சியடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் டிபிஎஸ் முதலீடு செய்துவருகிறது. சொத்து நிர்வாகம் அந்த அம்சங்களில் ஒன்றாகும்.

சொத்து நிர்வாக வர்த்தகத்தில் டிபிஎஸ் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. அதேவேளை, யுபிஎஸ் வங்கியுடன் ஒப்பிடுகையில் அது இன்னும் பெரிய அளவில் பின்தங்கியுள்ளதாக திருவாட்டி டான் குறிப்பிட்டார்.

சொத்து நிர்வாகத்தைப் பொறுத்தவரை யுபிஎஸ் உலகளவில் ஆகப் பெரிய வங்கியாகும். அது, 7.3 டிரில்லியன் டாலர் (9.25 டிரில்லியன் வெள்ளி) மதிப்பிலான சொத்துகளைக் கையாண்டுவருகிறது.

டிபிஎஸ் வங்கியின் இலக்கு

டிபிஎஸ், 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகளைக் கவனிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. அந்த வகையில், அது இன்னும் அதிகம் வளர்ச்சியடையவேண்டியிருக்கிறது என்று திருவாட்டி டான் சுட்டினார்.

“ஆனால் என்னைப் பொறுத்தவரை பெரும் செல்வந்தர்களுக்கு மட்டும் நான் உதவப்போவதில்லை. பெரும்பாலோரை உள்ளடக்கிய சந்தைக்கும் உதவ விரும்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வங்கிடிபிஎஸ்நிதிஆசியா