தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு சிங்கப்பூர் செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் பாய்ச்சியது

1 mins read
508ca1f2-f57c-484a-ac86-c0725c34b624
படம்: இஸ்ரோ -

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிங்கப்பூருக்குச் சொந்தமான 2 செயற்கைக்கோள்களை சனிக்கிழமை (எப்ரல் 22) விண்ணில் பாய்ச்சியுள்ளது.

பிஎஸ்எல்வி சி-55 என்ற ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. செயற்கைக்கோளின் எடை கிட்டத்தட்ட 757 கிலோகிராம்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌ஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.

இது புவி கண்காணிப்புக்காக ஏவப்படும் செயற்கைக்கோள் ஆகும். மேலும், பேரிடர் கண்காணிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இதற்கு முன்னர் இஸ்ரோ சிங்கப்பூரின் டெலியோஸ்-1 செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் 2015ஆம் ஆண்டு விண்ணில் பாய்ச்ச உதவியது.

குறிப்புச் சொற்கள்