ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், அதற்கு அடுத்த மாதம் தண்டனையைத் தொடங்க நீதிமன்றத்தில் சரணடையத் தவறினார்.
மியன்மார் நாட்டவரான ஃபியோ தாவ் கான்ட் போலி அடையாளத்துடன் பல வங்கிக் கணக்குகளைத் திறந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். அந்தக் கணக்குகள் பின்னர் மொத்தம் $60,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்த விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
28 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஃபியோவுக்கு திங்கட்கிழமை (ஜனவரி 19) ஒன்பது மாதங்கள், ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மொத்தம் $39,600க்கும் அதிகமான தொகையை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த மூன்று குற்றச்சாட்டுகளையும், அதனுடன் தொடர்பில்லாத வேறு திருட்டுக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
எஞ்சிய தொகையுடன் தொடர்புடையவை உட்பட மேலும் பதினான்கு குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
ஃபியோவுக்கு முன்னர் 2023 டிசம்பர் 21ஆம் தேதி அன்று 10 மாதங்கள் 10 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று கூறினார்.
பின்னர் ஒரு தேதியில் தண்டனைத் தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. 2014 ஜனவரி 11ஆம் தேதி அவர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

