மணிமாலா மதியழகனின் ‘ஈர நிலம்’ நூல் வெளியீடு

மணிமாலா மதியழகனின் ‘ஈர நிலம்’ நூல் வெளியீடு

1 mins read
89b4ed6f-0bc0-4b15-bf4d-6e915939f8a4
‘ஈர நிலம்’ நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெறுகிறது. - படம்: மணிமாலா

எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘ஈர நிலம்’ என்ற புதினம் வெளியீடு காணவுள்ளது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள வெளியீட்டு நிகழ்ச்சிக்குத் தேசிய நூலக வாரியம் ஆதரவளித்துள்ளது.

நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாம் தளத்தின் ‘பாசிபிலிட்டி’ அறையில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவுத் தலைவர் து.அழகிய பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். எழுத்தாளர் சித்ரா ரமேஷ் வாழ்த்துரை வழங்குகிறார். அதிபதி அனைத்துல நாடக நிறுவனத்தின் கலை இயக்குநர் இரா.புகழேந்தி நூலை அறிமுகம் செய்யவுள்ளார்.

சிங்கப்பூரின் அக்காலச் சமூக நிலைமை, வாழ்க்கை முறைகள், வரலாற்றுச் சம்பவங்களை மையமாகக்கொண்டு நூல் எழுதப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்