தீவு விரைவுச்சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
கார் ஓட்டுநர் கைது
9965283d-95ea-4166-b14d-27dcc9c58ad9
மோட்டார்சைக்கிளோட்டி நினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஷின் மின் டெய்லி வாசகர்

தீவு விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (நவம்பர் 10) நடந்த விபத்தில் 27 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.

சம்பவம் குறித்து திங்கட்கிழமை இரவு 10.20 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் தோ பாயோ லோராங் 6 வெளிவழியை அடுத்து மோட்டார்சைக்கிளும் காரும் மோதிக்கொண்டன.

மோட்டார்சைக்கிளோட்டி நினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார்சைக்கிளை ஓட்டிய ஆடவர் நினைவிழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்பில் 31 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது. உரிய கவனமின்றி வாகனத்தை ஓட்டியது, மரணம் விளைவித்தது ஆகியவை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணை தொடர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்