வணிகச் சேவைகளை வசதியாக்கும் புதிய செயலி

2 mins read
1100d98d-d5c8-43d1-9874-41aa6d517bc0
பல்வேறு வகையான பணம் செலுத்தும் முறைகளை ஒருங்கிணைக்கும் ‘Epos360 BlueTap’ செயலி வணிகர்களுக்கு மிகவும் வசதியான சாதனமாகும்.  - படம்: EPOS

பணம் செலுத்துதல் முதல் வங்கி சேவை, பகுப்பாய்வு வரையிலான வணிகத் தேவைகளுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் புதிய செயலி அறிமுகமாகியுள்ளது.

Epos360 எனும் அச்செயலியை பணம் செலுத்துதல், மின்னிலக்க தீர்வுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனமான ‘இபோஸ்’ (Epos) உருவாக்கியுள்ளது.

இந்தச் செயலி, பணம் செலுத்துதல், வங்கி மற்றும் கடன் வழங்கும் சேவைகள், வணிகத் தகவல்கள், பகுப்பாய்வுகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ‘Copilot’ உள்ளிட்ட கருவிகள் ஆகியவற்றை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.

Epos360-இன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் ‘Epos360 BlueTap’ஐ ‘இபோஸ்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கியூஆர், அட்டைகள் உட்பட பல கட்டண முறைகளை ஆதரிக்கும் கடையில் வாங்கக்கூடிய சாதனமாகும். பல்வேறு வகையான பணம் செலுத்தும் முறைகளை ஒருங்கிணைக்கும் இச்செயலி வணிகர்களுக்கு மிகவும் வசதியான சாதனமாகும்.

முதல் கட்டமாக, இது சிங்கப்பூர் சில்லறை விற்பனை, உணவு பானத் துறைகளில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு சேவை வழங்கும்.

தென்கிழக்கு ஆசியாவில் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் மின்னிலக்கமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கான ‘அன்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் சிங்கப்பூரில் இச்செயலி அறிமுகமானது. தொடர்ந்து மலேசியாவிலும் அறிமுகம் கண்டது.

இங்கு 6,000க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு சேவை செய்யும் ‘இபோஸ்’ஐ வெளியிடப்படாத தொகைக்கு ‘அன்ட் இன்டர்நேஷனல்’ மே மாதத்தில் வாங்கியது.

உலகளாவிய நிதித் தொழில்நுட்பசேவை வழங்கும் இது, மின்னிலக்க வங்கியான அனெக்ஸ்ட் (Anext), மின்னிலக்க சேவை வழங்கும் ஆண்டோம், அலிபே + ஐ போன்றவற்றையும் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்