விமானப் பயணத்தைச் சுவாரசியமாக்கும் புதிய செயலி

1 mins read
1e94dc26-f08d-488b-92ea-0609052a2577
சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி அறிமுகம் செய்யப்பட்ட ‘விங்கல்’ செயலியை இதுவரை 20,000க்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

விமானத்தில் செல்லும் சக பயணிகளுடன் நட்பை உருவாக்க கைகொடுக்கிறது ஒரு புதிய செயலி.

‘விங்கல்’ (Wingle) என்ற அச்செயலி, இணையச் சேவை இல்லாமலேயே சக பயணிகளுடன் உரையாட வகைசெய்கிறது.

ஆசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட அந்தச் செயலி தற்போது சிங்கப்பூரிலும் கால்பதித்துள்ளது.

விமானத்தில் சும்மாயிருக்கும் பயணிகளுக்கு அது பேருதவியாக இருக்கும் என்று செயலியைத் தயாரித்த நிறுவனம் நம்புகிறது.

‘விங்கல்’ செயலி மூலம் விமான நிலையங்களில் உள்ள ஓய்விடங்களையும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

திரு மெரினோ, திரு போல் குவின்டானா எனும் இருவரால் 2020ஆம் ஆண்டு செயலி உருவாக்கப்பட்டது. அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யும் அவ்விருவரின் கைவண்ணத்திலும் செயலி உருவாக்கப்பட்டது.

விமானத்தில் ஐந்து வரிசை தள்ளியிருப்போரிடமும் செயலி மூலம் பேசிப் பழகலாம்.

சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி மாதம் சேவை வழங்கத் தொடங்கிய செயலியை இதுவரை 20,000க்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்