தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகளவில் என்யுஎஸ் எட்டாவது இடம்

1 mins read
df1c9d67-879c-4767-86b2-1d4ba25cbd94
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்). - படம்: என்யுஎஸ் இணையத்தளம்

உலகளவில் கல்வி நிலையங்களுக்கானத் தரப் பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) மறுபடியும் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தொடர்ந்து பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது என்யுஎஸ்.

என்யுஎசுக்கு சற்றே பின்தங்கியிருக்கிறது மற்றொரு சிங்கப்பூர் பல்கலைக்கழகமான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு). பட்டியலில் என்டியு மூன்று இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்தது.

இதற்கு முன்பு ஓராண்டுக்கு முன்னர் என்டியு பட்டியலில் ஒன்பது இடங்கள் முன்னேறியிருந்தது.

பிரிட்டனில் இயங்கும் குவேக்குவரெல்லி சிமண்ட்ஸ் (Quacquarelli Symonds) நிறுவனம் 22வது ஆண்டாக இந்தப் பட்டியலை வரைந்துள்ளது. 106 நாடுகளிலிருந்து 1,500 பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பட்டியலில் ஆக உயரிய இடத்தைப் பிடித்துள்ள ஆசிய பல்கலைக்கழகமாக என்யுஎஸ் விளங்குகிறது. பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் முடித்த முதல் ஆசிய பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் என்யுஎஸ் பெற்றுவருகிறது.

அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் குவேக்குவரெல்லி சிமண்ட்ஸ் பட்டியலின் முதல் சில இடங்களை வகிக்கின்றன. 14வது ஆண்டாகப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது அமெரிக்காவின் மேசச்சூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (MIT). இரண்டாவது இடத்தை பிரிட்டனின் ‘இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன்’ பிடித்தது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்ட், அமெரிக்காவின் ஹார்வர்ட் இரண்டும் நான்கு, ஐந்தாம் இடங்களை வகிக்கின்றன. அவ்விரு பல்கலைக்கழகங்களும் பட்டியலில் ஓரிடம் இறங்கின.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம், பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

குறிப்புச் சொற்கள்