தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ்’ தீ: அறுவர் மருத்துவமனையில்

1 mins read
6a2710f3-5ea9-45b9-931c-e23548f41bc0
‘பீப்பிள்ஸ் பார்க் காம்பிளக்ஸ்’ தீச்சம்பவம். - படங்கள்: சியாவ்ஹோங்‌ஷு

சைனாடவுன் வட்டாரத்தில் இருக்கும் பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்சில் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அதிகாலை தீ மூண்டதைத் தொடர்ந்து அறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

திங்கட்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் தீ குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. வர்த்தகப் பகுதிகள், வீடுகள் ஆகிய இருவகை இடங்களையும் கொண்டுள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்சின் ஆறாம் தளத்தில் துப்புரவுப் பணிகளுக்கான பொருள்கள், சாதனங்களுக்கும் தீக்கும் தொடர்புள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

குழாய் மூலம நீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டதாகவும் படை கூறியது.

புகையைச் சுவாசித்த அறுவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடைபெறுகிறது.

எக்ஸ், சியாவ்ஹோங்‌ஷு (Xiaohongshu) ஆகிய தளங்களில் சம்பவக் காட்சிகளைக் கொண்ட காணொளிகள் பகிரப்பட்டன.

குறிப்புச் சொற்கள்