தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‌ஷங்ரிலா கலந்துரையாடல்: அமெரிக்கா மீதான நம்பிக்கையை அதிகரிக்க தற்காப்பு அமைச்சர் முயற்சி

1 mins read
71276eca-0ef7-4b62-9386-f325c296127c
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஆசிய வட்டாரத்துக்குச் சீனாவைவிட அமெரிக்காதான் நம்பகமான பங்காளி என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் நடைபெறவுள்ள ஷங்கிரிலா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆசிய தற்காப்பு அமைச்சர்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சியில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் ஆசிய வட்டாரத்தின் மீது எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கும் வேளையில் இச்செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இத்தகவலைத் தெரிவித்தனர்.

தற்காப்பு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல் சில மாதங்களில் திரு ஹெக்செத் பெரும்பாலும் உள்ளூர் விவகாரங்களில் கவனம் செலுத்தினார். அவர், இந்தோ பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா எத்தகைய தற்காப்பு அணுகுமுறையைப் பின்பற்றும் என்பதைப் பற்றி வரும் சனிக்கிழமை (மே 31) ‌ஷங்ரிலா கலந்துரையாடலில் விரிவாகப் பேசுவார்.

சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) வரை நடைபெறவிருக்கும்‌ ஷங்கிரிலா கலந்துரையாடல், ஆசியாவின் முன்னணி தற்காப்பு மாநாடாகும். உலக நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள், தற்காப்பு அதிகாரிகள், அரசதந்திரிகள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்