ஏஐ கட்டமைப்பைக் கண்காணிக்க இணையப் பெயர் முறையைச் சிங்கப்பூர் ஆராய்கிறது

ஏஐ கட்டமைப்பைக் கண்காணிக்க இணையப் பெயர் முறையைச் சிங்கப்பூர் ஆராய்கிறது

படம்: ராய்ட்டர்ஸ்

05 Nov 2026 - 2:51 pm

1 mins read

இணையத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இணையத்தளச் சரிபார்ப்பு முறைகள், தன்னிச்சையாக இயங்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்புகளைக் கண்காணிப்பதன் தொடர்பில் சிங்கப்பூர் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கெனத் தனியாக ஒரு தேசியப் பதிவேடு தேவைப்படுகிறதா என்பதை முடிவுசெய்யும் விரிவான மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, இணையத்தின் முகவரிப் புத்தகம் என்று பரவலாக அழைக்கப்படும் இணையப் பெயர் முறையைப் பயன்படுத்துவது குறித்து ஆராய, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு தளங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இயங்கும் ஏஐ கட்டமைப்புகளை அடையாளம் காணவும் உறுதிசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

“நடைமுறையில் எது சாத்தியப்படும் என்பதைக் கண்டறிய தொழிற்துறையுடன் இணைந்து பணியாற்றுவதே எங்கள் அணுகுமுறையாகும். தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகள், புதிதாக அமைக்கப்படும் அனைத்துலகத் தரநிலைகள் ஆகியவற்றை நாங்கள் பயன்படுத்துவோம்.

“அதேவேளையில், தொழிற்துறையால் சுயமாகக் கையாள முடியாத இடைவெளிகள் இருக்கும் பட்சத்தில், பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது உள்கட்டமைப்பு வசதிகளுடன் நாங்கள் முன்வருவோம்,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் புதன்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்