சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்துக்கான (நவம்பர் 1) காற்றுத்தரம் நல்லது முதல் மிதமான அளவில் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றுப்புற அமைப்ப்ய் வெளியிடும் காற்றுத்தரத்துக்கான விவரங்கள் https://www.haze.gov.sg/ எனும் அதன் இணையப் பக்கத்தில் வழங்கப்படுகிறது. அதில் காற்றுத்தரக் குறியீடு 51 முதல் 70 வரையில் இருக்கும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை முதியோர், நாட்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் உட்பட்ட அனைத்துப் பிரிவினரும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
