தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் நிலையத்தில் வெள்ள தயார்நிலை பாவனைப் பயிற்சி

2 mins read
e98c7305-1728-498b-8c6e-a35111866f33
வெள்ளத் தடுப்பு அணையை அமைக்கும் வெள்ள மீட்புக் குழுவினர். வட்ட ரயில் பாதையின் 30 நிலையங்களில் 16ல் எஸ்எம்ஆர்டி வைத்துள்ள மூன்று வகையான வெள்ளத் தடுப்புகளில் இது ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒன்-நார்த் எம்ஆர்டி நிலையத்தில் ஆறு நிமிடங்களில் மூன்று அடுக்குகள் வெள்ளத் தடைகளை எஸ்எம்ஆர்டி குழுவினர் அமைத்தனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் வெள்ள ஆயத்தப் பயிற்சியின் ஓர் அங்கமாக டிசம்பர் 12ஆம் தேதி மாலை அந்த பாவனைப் பயற்சி இடம்பெற்றது.

சிங்கப்பூரின் வடகிழக்கில் இருந்து பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்பட்டால், இருக்க வேண்டிய தயார்நிலை அடிப்படையில் அந்த ஒரு மணிநேர பாவனைப் பயிற்சி. புவன விஸ்தா அருகேயுள்ள ஒன் நார்த் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 12ஆம் தேதி மாலை ஒன்-நார்த் எம்ஆர்டி நிலையத்தில் வெள்ள ஆயத்தப் பயிற்சி இடம்பெற்றது.
டிசம்பர் 12ஆம் தேதி மாலை ஒன்-நார்த் எம்ஆர்டி நிலையத்தில் வெள்ள ஆயத்தப் பயிற்சி இடம்பெற்றது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயிற்சியில், எஸ்எம்ஆர்டியின் வழக்கமான வெள்ளக் கண்காணிப்பு நடவடிக்கையாக, தேசிய நீர் முகமையான பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர்மட்ட உயர்வு எச்சரிக்கைக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது

நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சுங்கை பாண்டான் கெச்சில் கால்வாயின் கொள்ளளவில் 75 விழுக்காட்டுக்கு மேல் தண்ணீர் உயர்ந்தபோது, எஸ்எம்ஆர்டியின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தனது வெள்ள மீட்புக் குழுவை தயார்நிலையில் வைத்தது.

கால்வாயின் கொள்ளளவில் 90 விழுக்காட்டுக்கு மேல் தண்ணீர் நிறைந்தபோது, வெள்ள மீட்புக் குழு ஒன்-நார்த் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. தீவு முழுவதும் இருந்து ஒவ்வொரு முறையும் இருபது பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவர்கள் 45 நிமிடங்களுக்குள் வந்து சேர வேண்டும்.

கால்வாயில் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதும் வெள்ள மீட்புக் குழுவினர், தண்ணீர் செல்லும் அபாயமுள்ள ரயில் நிலையத்தின் நுழைவாயில்களுக்கு வெள்ளத் தடைகளை நகர்த்தத் தொடங்கினர். இந்த வெள்ளத் தடைகள், தரை மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டு, நிலையத்திற்குள் வெள்ளநீர் நுழைவதைத் தடுக்க உதவுகின்றன.

உண்மையில் வெள்ளம் ஏற்பட்டால்  நிலையங்களிலும் எஸ்எம்ஆர்டியின் சமூக ஊடகத் தளங்களிலும் பயணிகளுக்கு நிலைமையைக் குறித்து எச்சரிக்கப்படும்.
உண்மையில் வெள்ளம் ஏற்பட்டால் நிலையங்களிலும் எஸ்எம்ஆர்டியின் சமூக ஊடகத் தளங்களிலும் பயணிகளுக்கு நிலைமையைக் குறித்து எச்சரிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிலையத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளின் நடுப்பகுதியைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்தவுடன் வெள்ள மீட்புக் குழு இடைவெளியை மூடி நுழைவாயிலை மூடும். மற்ற நிலைய நுழைவாயில்களுக்கு பயணிகளை குழு வழிநடத்தும்.

உண்மையில் வெள்ளம் ஏற்பட்டால் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அறிவிக்கப்படும். நிலையங்களிலும் எஸ்எம்ஆர்டியின் சமூக ஊடகத் தளங்களிலும் பயணிகளுக்கு நிலைமை குறித்து எச்சரிக்கப்படும் என்று ரயில் நடத்துநர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்