தென்கிழக்காசியாவை வாட்டும் வெயில்

தென்கிழக்காசியாவை வாட்டும் வெயில்

1 mins read
கடுமையான வெயிலும் எரிபொருள் தட்டுப்பாடும் தென்கிழக்காசிய நாடுகளை பாதித்துள்ளன
68024509-cf4d-49be-adfe-ab7fe63a7e72
அனல் வீசும் நிலையில் மின்சாரம், எரிபொருள் கட்டுப்பாடுகளும் மக்களை வெகுவாக பாதித்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தென்கிழக்காசியாவை வெப்ப அலை சூழ்ந்து மக்களை வாட்டுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளைப் பல நாடுகள் கடைப்பிடிக்கின்றன.

இவ்வட்டார நாடுகளின் அலுவலக ஊழியர்கள் நிறுவனங்களின் மின்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை மாற்றியமைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல அரசாங்கங்கள், எரிபொருளைச் சேமிக்கக் குளிரூட்டிப் பயன்பாட்டை குறிப்பிட்ட அளவோடு இயக்க விதிமுறைகளைச் செயல்படுத்தியுள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்காவும் ஈரானும் தடைகளை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, தற்போதைய வெயில் காலத்தில் மின்சாரம், எரிபொருள் கட்டுப்பாடுகள் தென்கிழக்காசிய மக்களுக்கு எவ்வித ஆறுதலையும் வழங்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.

குறிப்பாக, தாய்லாந்து வெப்பத்தால் தள்ளாடி வருகிறது. கடந்த சில வாரங்களில் அங்கு சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கும் மேலாகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டு அரசாங்கம் பலமுறை அபாய வெப்பநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

மார்ச் மாதத்தில் அங்குப் பொது அலுவலகங்களில் குளிரூட்டிகள் 26 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

சகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் மூச்சு விடவே சிரமப்படுவதால், சொந்தமாகக் காற்றாடிகளை எடுத்துவந்து நிலைமையைச் சமாளிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்