சிங்கப்பூரில் பிறந்த முதல் பாண்டா கரடி சீனாவிடம் ஒப்படைப்பு

1 mins read
9c250348-181d-4854-bf93-b30b9a84bcf5
சிங்கப்பூரில் பிறந்த லேலே பாண்டா கரடி. - படம்: சாவ்பாவ்

முதன்முறையாக சிங்கப்பூரில் பிறந்த லேலே என்று பெயரிடப்பட்ட பாண்டா கரடி இவ்வாண்டு டிசம்பர் மாதம் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

நவம்பர் மாதம் 20ஆம் தேதியன்று இந்த பாண்டா கரடியை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் ‘ரிவர் வண்டர்ஸ் பவிலியன் ஜயன்ட் பாண்டா ஃபாரஸ்ட்’ காட்சியகத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

சீனாவிற்கு அனுப்புவதற்கு முன்பு டிசம்பர் மாதத்தின் பிற்பாதியில் லேலே தனிமைப்படுத்தப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று அறிக்கை ஒன்றில் மண்டாய் வனவிலக்குக் காப்பகக் குழுமம் தெரிவித்தது.

தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிய லேலே, சுயமாக இயங்குவதில் கைதேர்ந்து வருவதாகக் காப்பகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்