முன்னோடி கட்டடக்கலை வல்லுநர்களின் வரலாறு கூறும் இணையத்தளம்

1 mins read
68335e2e-ce33-4ec6-9015-c53b98a8013a
சிங்கப்பூரின் முன்னோடி கட்டடக் கலை வல்லுநர் டான் செங் சியோங், ஊட்ரம் வட்டாரத்தில் உள்ள பேர்ல் பேங்க் அடுக்குமாடிக் குடியிருப்பை வடிவமைத்தவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முன்னோடி கட்டடக் கலை வல்லுநர்களின் வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பல்வேறு கட்டடங்களை வடிவமைத்தவர்கள் குறித்தும் அவர்களின் நிறுவனங்கள் குறித்தும் விரிவான தகவல்கள் அந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

‘ஜீனியாலஜி ஆஃப் ஆர்க்கிடெக்சுரல் பிரேக்டிசஸ் 2.0’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இணையத்தளம் சுருக்கமாக ‘கேப்ஸ் 2.0’ என்று அழைக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலக் கட்டடங்கள் நிறைந்திருந்த சிங்கப்பூரில், தேசிய அரங்கு (நேஷனல் தியேட்டர்), பீப்பல்ஸ் பார்க் வளாகம், பேர்ல் பேங்க் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வடிவமைப்புகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டியவர்கள் தொடர்பான தகவல் களஞ்சியமாக ‘கேப்ஸ் 2.0’ விளங்குகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

சிங்கப்பூர் கட்டடக் கலை வல்லுநர்கள் கழகத்தின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கப்பட்ட அந்த இணையத்தளத்தில் ஆக அண்மைய தகவல்களையும் தொடர்ந்து சேர்க்க இயலும்.

தற்போது, மொத்தம் 577 நிறுவனங்கள், 870 முக்கியப் புள்ளிகள் குறித்த தகவல்கள் ‘கேப்ஸ் 2.0’ இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்