காஸா நிவாரண உதவிக்கு சிங்கப்பூரில் புதிய நிதித் திரட்டு

காஸா நிவாரண உதவிக்கு சிங்கப்பூரில் புதிய நிதித் திரட்டு

1 mins read
ஏற்கெனவே $135,000க்கு மேற்பட்ட உதவிப்பொருள்களை அனுப்பிய ‘ஹியுமானிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் முயற்சி
e158b6ca-d926-4f11-8b0b-97a908665fe0
ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பு காஸாவிற்கு அனுப்பிய 36 டன் உணவுப்பொருள்களின் மதிப்பு $135,000 என்று கூறப்பட்டது. - படம்: ஹியுமானிட்டி மேட்டர்ஸ்

சிங்கப்பூரைச் சேர்ந்த பலசமயக் குழுவான ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பு, காஸாவிற்கு நிவாரண உதவி வழங்குவதற்கான புதிய நிதித் திரட்டைத் தொடங்கவிருக்கிறது.

மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை, தீவெங்கும் நன்கொடைகள் திரட்டப்படும் என்று அது கூறியது. இதற்காக இரண்டுமுறை தொண்டூழியர்கள் வீதிகளில் நின்று நிதி திரட்டுவர்.

மார்ச் மாதப் பிற்பகுதியில், 40 டன் உணவு, உதவிப்பொருள்களை ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பு காஸாவிற்கு அனுப்பியுள்ளது.

ஜோர்தானியத் தலைநகர் அம்மான் கொண்டுசேர்க்கப்பட்ட 36 டன் உணவுப்பொருள்களின் மதிப்பு S$135,000 என்று அமைப்பு தெரிவித்தது.அதில் கிட்டத்தட்ட 25 டன் உணவுப்பொருள்கள், மார்ச் 27, 28ஆம் தேதிகளில் வான்வழியாக விநியோகம் செய்யப்பட்டன. எஞ்சிய 11 டன் உணவுப்பொருள்கள் தரைவழியாக விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.

ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஹியுமானிட்டி மேட்டர்சின் முக்கிய நன்கொடை திரட்டில் தொண்டூழியராகப் பங்களிக்க விரும்புவோர், ‘bit.ly/hallow24’ எனும் தளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம்.

‘பே நவ்’, காசோலை, வங்கி மூலமான பணப் பரிமாற்றம் ஆகிய வழிகளிலும் நன்கொடை அளிக்க இயலும்.

குறிப்புச் சொற்கள்