உட்லண்ட்சில் உள்ள கால்வாயில் கார் ஒன்று சறுக்கி விழுந்தது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 10, அட்மிரல்டி ரோடு வெஸ்ட் சாலைச் சந்திப்பில் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 7) அச்சம்பவம் நிகழ்ந்தது. காரின் ஓட்டுநரான 68 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
புதன்கிழமை இரவு ஒன்பது மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் பதிவான படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. கால்வாயின் ஓரத்தில் ஆபாயகரமான விதத்தில் கார் தொங்கிக்கொண்டிருந்தது அப்படங்களில் தெரிந்தன. சம்பவ இடத்தில் அதிகாரிகள் இருந்ததும் தெரிந்தது. சாலைக்கு அருகே இருந்த சில சைக்கிள்களுக்குப் பக்கத்தில் கால்வாயைச் சுற்றியிருந்த சில கம்பிகள் சிதறிக் கிடந்ததும் மற்றொரு படத்தில் காணப்பட்டது.
சம்பந்தப்பட்ட கார் சறுக்கிச் சென்றதால் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது காரின் ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
ஓட்டுநர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.