தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம்: சிறிது நேரத்தில் தொடங்கவிருக்கிறது

1 mins read
df88deaf-8ba6-4476-a478-540eb6264dc0
தமிழ் முரசு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6), 90ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது. அதனை முன்னிட்டு ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூரில் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6), 90ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு, ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அமைச்சர்கள் திருமதி ஜோசஃபின் டியோ, குமாரி இந்திராணி ராஜா, திரு எட்வின் டோங், தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், மூத்த துணையமைச்சர்கள் திரு ஜனில் புதுச்சேரி, திரு முரளி பிள்ளை, துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு விக்ரம் நாயர், டாக்டர் ஹமீது ரசாக் ஆகியோரும் கலந்துகொள்வர்.

இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சியில், சமூகத் தலைவர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோர் உட்பட ஏறத்தாழ 1,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்