தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுற்றுலாத் துறையில் தாய்லாந்தை முந்திய வியட்னாம்

2 mins read
c0f52485-301b-4514-b584-e33fb9836fea
சீனாவிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் தாய்லாந்தைவிட வியட்னாமுக்குப் படையெடுக்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நாடுகளில் தாய்லாந்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் வந்துள்ளது வியட்னாம்.

சீனாவிலிருந்து வியட்னாம் சென்ற பயணிகள் எண்ணிக்கை இவ்வாண்டு சாதனை அளவாக 3.5 மில்லியனை எட்டிவிட்டது.

மோசடி நிலையங்கள் குறித்த அச்சம், சீன நடிகர் ஒருவர் இவ்வாண்டு ஜனவரி மாதம் கடத்தப்பட்ட விவகாரம் போன்றவை சீனச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்தை தவிர்ப்பதற்கான சில காரணங்கள். தாய்லாந்து சென்ற சீன சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை இவ்வாண்டு 35 விழுக்காடு சரிந்தது.

சுற்றுப்பயணிகள் செல்லவிரும்பும் நாட்டை மாற்றியிருப்பதால் சுற்றுப்பயணத் துறை மூலம் தாய்லாந்துக்கு வரவிருந்த $3.5 பில்லியன் டாலர் வருமானத்தை வியட்னாமும் இதர அண்டை நாடுகளும் தட்டிச் சென்றன.

தனியாகப் பயணம் செய்யவிரும்பும் சீனச் சுற்றுப்பயணிகள் பலர் வியட்னாமுக்குச் செல்கின்றனர். வியட்னாம் வழக்கத்துக்கு மாறான, பண்பாட்டு அம்சங்களை அதிகம் தரும் தளமாகவும் இருப்பதாகவும் சுற்றுப்பயணிகள் கருதுகின்றனர்.

2025இல் வியட்னாமுக்கு இதுவரை கிட்டத்தட்ட 14 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வந்துள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் சீனாவிலிருந்து வந்த சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 44 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

- படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாண்டின் முற்பாதியில் மலேசியாவுக்குச் சென்ற சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையும் 35 விழுக்காடு கூடியது. சீனாவிலிருந்து சென்றோர் எண்ணிக்கை ஏறக்குறைய 50 விழுக்காடு அதிகம்.

சீனா நாட்டவருக்குப் விசா இல்லா வருகை நடைமுறை, வலுவிழந்துள்ள மலேசிய ரிங்கிட் ஆகியவற்றால் இன்னும் அதிகமான சீனச் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்குப் படையெடுக்கக்கூடும் என்று மலேசிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கான சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ‌‌ஷஹாருடின் சாயிட் குறிப்பிட்டார்.

வியட்னாம் அரசாங்கமும் தனியார் சுற்றுலா நிறுவனங்களும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளைக் குறிப்பாகச் சீனாவிலிருந்து வருவோரை அதிகம் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளன.

குறிப்புச் சொற்கள்