தமிழகத்தில் 23 பெண்கள் எம்எல்ஏக்களாகத் தேர்வு

தமிழகத்தில் 23 பெண்கள் எம்எல்ஏக்களாகத் தேர்வு

1 mins read
68eea3d8-688e-44f5-8679-5414a52584e8
நாம் தமிழர் கட்சியை சேர்க்காமல் 55 பெண் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். - கோப்புப்படம்: விஜய் ஃபேன்ஸ் டிரெண்ட்ஸ்

சென்னை: தமிழகத்தில் அடுத்து அமைய உள்ள சட்டமன்றத்தில் 23 பெண்களின் குரல் ஒலிக்க உள்ளது. ஆக அதிகமாக தவெக சார்பில் 13 பெண்கள் இம்முறை எம்எல்ஏக்களாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதிமுக சார்பில் 6 பேரும் மார்க்சிஸ்ட், தேமுதிக, பாமக, காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இந்தத் தேர்தலில் ஏராளமான பெண் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததும் கவனிக்கத்தக்கது.

நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சரிபாதி, அதாவது, 117 தொகுதிகளில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களில் சிலர் அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆவர். எனினும் அனைவரும் தோல்வியைத் தழுவினர்.

தவெக பெண் வேட்பாளர்களில் பத்துப் பேர், திமுகவில் 18 பேர், அதிமுகவில் 15 பேர் தோல்வி கண்டுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஆறு பெண்களுக்கும், பாமக, விசிகவை சேர்ந்த இரு பெண்களுக்கும் தோல்வியே மிஞ்சியது. காங்கிரசில் பெண் வேட்பாளர் ஒருவர் தோல்வியைத் தழுவிய நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்க்காமல் 55 பெண் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்