தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்டாலின் உடல்நலம் குறித்து அப்போலோ அறிக்கை

1 mins read
69c3fa8c-aec1-45db-afa0-cc2beae775b4
முதல்வர் ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும் மிக விரைவில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக திரு ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும் அதை சரிசெய்ய ஜூலை 24ஆம் தேதி உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில், நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, முதல்வர் ஸ்டாலினுக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டது. அதனால் அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர் நலமாக இருப்பதாகவும் மிக விரைவில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் உள்ள வேறுபாடுகளைச் சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்ததாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை தெரிவித்தது.

“வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ‘ஆஞ்சியோகிராம்’ சோதனை இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இண்டு நாள்களில் மேற்கொள்வார்,” என்று அப்போலோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்