தவெக அரசு மீது குதிரை பேரப் புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு

தவெக அரசு மீது குதிரை பேரப் புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு

1 mins read
c8fa2e43-1a96-47e6-ae6c-e7d4960953af
குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக மீது ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுகவும் அதிமுகவுடன் தொடர்ந்து புகார் கூறிவரும் நிலையில், இதுதொடர்பாக சனிக்கிழமை (ஜூலை 4) இரு கட்சிகளும் தமிழக ஆளுநர் அர்லேகரிடம் மனு அளித்துள்ளனர்.

குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக மீது ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ் பாரதி, அண்மையில் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் இணையுமாறு காவல்துறையினர் மிரட்டியதாகக் குறிப்பிட்டார்.

திமுக எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அமைச்சர் பதவியும் மற்றொரு எம்எல்ஏவிற்கு ரூ.50 கோடி தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக ஆர்எஸ் பாரதி தெரிவித்தார்.

இதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்பி ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு இன்பதுரை, அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கியிருந்த இடத்திற்கு முதல்வர் விஜய்யே நேரில் சென்று சில வாக்குறுதிகளை அளித்ததாகத் தெரிகிறது என்றும் அதன் பிறகே நான்கு எம்எல்ஏக்கள் பதவி விலகி தவெகவில் இணைந்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்