சென்னை விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனையின் புதிய மருந்தகம்

சென்னை விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனையின் புதிய மருந்தகம்

1 mins read
452537f2-231d-4382-8f84-1ed67a802b33
காவேரி மருந்தகத் திறப்பு நிகழ்ச்சியில் முக்கியப் பிரமுகர்கள். - படம்: காவேரி மருத்துவமனை/ஃபேஸ்புக்

மீனம்பாக்கம்: இந்தியாவின் காவேரி மருத்துவமனை, சென்னை விமான நிலையத்தில் புதியதொரு மருந்தகத்தைத் திறந்துவைத்துள்ளது.

பயணிகளுக்கும் விமான நிலையப் பணியாளர்களுக்கும் உடனடி மருத்துவப் பராமரிப்பை வழங்குவது அந்த மருந்தகத்தின் நோக்கம். அதன் செயல்பாட்டுக்கு மருத்துவத் தொழில்நுட்பமும் பிரத்தியேக சுகாதாரப் பராமரிப்புக் குழு ஒன்றும் ஆதரவளிக்கும்.

தொடர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு உதவ, அங்கு இரு அவசர மருத்துவ வாகனங்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் தா.மோ. அன்பரசனும் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியும் மருந்தகத்தை திங்கட்கிழமை (அக்டோபர் 14) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தனர்.

காவேரி மருத்துவமனை நிறுவனரும் அதன் செயலாக்கத் தலைவருமான டாக்டர் சந்திரகுமார் சுந்தரராஜும் அந்த மருத்துவமனையின் இணை நிறுவனரும் அதன் செயலாக்க இயக்குநருமான அரவிந்தன் செல்வராஜும் உடனிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்