தொகுதி மறுவரையறை மசோதாவைக் கைவிட வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் தீர்மானம்

தொகுதி மறுவரையறை மசோதாவைக் கைவிட வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் தீர்மானம்

2 mins read
b157376f-988a-414b-b78d-753fb1a5fdf2
அதே வேளையில் தவெக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரசின் 11 எம்பிக்கள், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுகவின் ஒரு எம்பி உட்பட 19 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை இந்திய அரசு கைவிட வேண்டும் எனத் தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சனிக்கிழமை (ஜூலை 8) சென்னையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முதன்மை எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாமக உள்ளிட்டவை பங்கேற்கவில்லை.

இந்திய நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோதாவை மீண்​டும் கொண்​டுவர இந்திய அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. எனினும், பல மாநிலங்களில் இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்திலும் பல்வேறு தரப்பினர் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறைப் பணிகள் குறித்து விவாதிக்க முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம, கட்சிகளைச் சேர்ந்த 37 எம்பிக்கள் பங்கேற்கவில்லை.

அதே வேளையில் தவெக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரசின் 11 எம்பிக்கள், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுகவின் ஒரு எம்பி உட்பட 19 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் குமார், தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.

தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் 543 இடங்கள் என்ற‌ எண்ணிக்கையும் தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். மாறாக, எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும் என்றார்.

மக்களவையில் தற்போதுள்ள 543 பேர் பேசுவதற்கே இப்போது நேரமில்லை என்றும் உறுப்பினர் எண்ணிக்கை 850ஆக அதிகரித்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவே நேரம் இருக்காது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்