சிங்கப்பூரில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம்

சிங்கப்பூரில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம்

1 mins read
2fc9c504-7bbd-4fb0-900d-2b120ed44adb
கனமழை காரணமாக புக்கிட் தீமா, டன்னர்ன் சாலைகளில் உள்ள கால்வாயில் நீர் முழுமையாக நிரம்பியது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படம்: ROADS.sg /ஃபேஸ்புக் -
multi-img1 of 3

சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் இன்று (ஏப்ரல் 17) கனமழை பெய்தது. இதன் விளைவாக தீவின் மேற்கு, மத்திய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

குவீன்ஸ்டவுன், புக்கிட் தீமா, உலு பாண்டான் ஆகிய வட்டாரங்களில் நீர் நிரம்பிய கால்வாய்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் ஆகியவற்றைக் காட்டும் காணொளிகளையும் படங்களையும் இணையவாசிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.

சாக்கடைகளிலும் கால்வாய்களிலும் நீரின்அளவு 90 விழுக்காடு கொள்ளளவை எட்டியதாகவும் திடீரென்று வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் இன்று நண்பகலிலிருந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.

சிங்கப்பூரில் உள்ள 30 வட்டாரங்களைத் தவிர்க்கும்படி பொதுமக்களுக்குக் கழகம் அறிவுறுத்தியது.

டக்ஸ்டன் சாலை, காமன்வெல்த் லேன், டன்னர்ன் சாலை, புக்கிட் தீமா கால்வாய், பாசிர் பாஞ்சாங், ஜூரோங் டவுன் ஹால் ஆகிய வட்டாரங்கள் இவற்றில் அடங்கும்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரில் கனமழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை சேவை முன்னுரைத்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களின் முற்பகுதியில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்