இலங்கை அதிபர் கோத்தபாய அதிகாரபூர்வமாக பதவி விலகினார்

இலங்கை அதிபர் கோத்தபாய அதிகாரபூர்வமாக பதவி விலகினார்

2 mins read
e0f7a0c4-0be8-4bfc-a59d-c36157f0dc46
சிங்கப்பூருக்கு வரவில்லை இலங்கை அதிபர் கோதபாய. படம்: கோதபாய ராஜபக்சே ஃபேஸ்புக் -

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேசின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் இன்று (ஜூலை 15) தெரிவித்தார்.

கோத்தபாய சட்டப்படி பதவி விலகிவிட்டார் என்றும் வியாழக்கிழமை முதல் அது நடப்புக்கு வந்தது என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறினார். திரு கோத்தபாய தமது பதவி விலகல் குறித்து நேற்று சிங்கப்பூரிலிருந்து மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார் என்றும் அவர் சொன்னார்.

திரு கோத்தபாயவின் பதவி விலகல் மின்னஞ்சல் உண்மையானதா என்று பரிசோதிக்கப்பட்டு பின்பு அதிகரபூர்வ அறிவிப்பு செய்யப்படும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்தனே கூறியிருந்தார்.

இலங்கையின் பொருளாதாரச் சரிவுக்கு 73 வயது கோத்தபாய ராஜபக்சேவின் மோசமான நிர்வாகம் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் பல மாதங்களாக இலங்கையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்துள்ளனர்.

22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கையில் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வந்ததுள்ளது. மாதக் கணக்காகப் பணவீக்கத்தால் திண்டாடியது. விலை உயர்வு, மின்சாரமில்லா நிலை, எரிவாயு விலை உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இலங்கை மக்களை அலைக்கழித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலவாணி இல்லாமல் போனதை அடுத்து இலங்கை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. இலங்கை நொடித்துப்போனதாக அறிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னதாக அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கையைவிட்டு தப்பி மாலத்தீவில் தஞ்சம் அடைந்த திரு கோத்தபாய நேற்று சிங்கப்பூருக்கு சவூதி அரேபியா விமானம் வழி வந்திறங்கினார்.

மேலும் படிக்க: கோத்­த­பாய இங்கு அடைக்­க­லம் நாட­வும் இல்லை, அவ­ருக்கு அடைக்­க­லம் வழங்­கப்­ப­ட­வும் இல்லை: சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர் வந்திறங்கினார் கோத்தபாய