மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கான உதவி கடினமாக்கப்படும்

மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கான உதவி கடினமாக்கப்படும்

படம்: புளூம்பர்க்

12 Nov 2026 - 5:17 pm

1 mins read

சுமார் 10 அமெரிக்கர்களில் ஒருவருக்குப் பயனளிக்கும் மத்திய அரசின் மிகப்பெரிய உணவு உதவித் திட்டத்தின் மூலம் உணவு உதவியைப் பெறுவதைக் கடினமாக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட விதி, ஒரு குறைபாட்டைச் சரிசெய்யும் என்று நிர்வாகம் கூறுகிறது. இதன்படி, ‘தேவைப்படுபவர்களுக்கான தற்காலிகக் குடும்ப உதவித் திட்டம்’ மூலம் சலுகைகளைப் பெறும் சிலர், ‘கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டத்தின்’ கீழ் தானாகவே தகுதி பெறும் நடைமுறை இனி அனுமதிக்கப்படாது.

உத்தேச மாற்றம் நடைமுறைக்கு வந்தால் 2029 நிதியாண்டுக்குள் சுமார் 6.3 மில்லியன் மக்கள் கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டத்திற்கான தகுதியை இழக்க நேரிடும் என்று திட்டத்தை நிர்வகிக்கும் அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ஏற்கெனவே கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டப் பலன்களை இழந்த 5.5 மில்லியன் பேரைச் சேர்க்கவில்லை.

கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்மொழியப்பட்ட விதிமுறை ஒன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் வரை பொதுமக்களிடமிருந்து கருத்துகளை அரசு கோருகிறது. இந்த விதிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

கடந்த ஆண்டு வெளியான அமெரிக்க வேளாண்மைத் துறை அறிக்கையின்படி, நாற்பத்தொரு மாநிலங்களும் கொலம்பியா மாவட்டமும் கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டத்திற்கான பரந்த அடிப்படையிலான வகைசார் தகுதியின் ஏதேனும் ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்