பல ஐரோப்பிய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பல ஐரோப்பிய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

படம்: ராய்ட்டர்ஸ்

05 Nov 2026 - 9:20 pm

1 mins read

பாரிஸ்: ஐரோப்பாவில் பல விமானங்களுக்கு வியாழக்கிழமை (நவம்பர் 5) காலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவற்றில் பல அவசரமாக மாற்று விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணச் சேவைகளை ராணுவப்போர் விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க உதவின. இது இவ்வாரம் இரண்டாம் முறையாக நடந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் ஏறக்குறைய 12 விமானச் சேவைகள் இந்த சம்பவத்தில் குறிவைக்கப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு சோதனைகள் நடந்தாலும் அவற்றில் எதையும் சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக உண்மையானவை என்று உறுதிசெய்யவில்லை

மிரட்டல் விடுத்தோர்கள் அடையாளம் காணப்பட்டதாக எந்த நாடும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஐரோப்பிய அதிகாரிகள், ரஷ்யாவையும் ஈரானையும் இதுபோன்ற நாசவேலைகளுக்கும் மறைமுக மிரட்டல்களுக்கும் காரணம் எனக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ரஷ்யா, ஈரான் இருநாடுகளும் அதனை நிராகரித்துள்ளன.

இரு விமானப் பயணச் சேவைகள் பாதைமாற்றிவிடப்பட்டதோடு பல விமானங்களுக்கு ராணுவ விமானங்களின் பாதுகாப்பு நேரடியாக வழங்கப்பட்டது.

அவ்வாறு அயர்லாந்து தலைநகர் டப்லினில் இருந்து இத்தாலியின் ரோம் நகர் செல்லவேண்டிய விமானம் பிரான்சின் ராணுவ விமான நிலையத்துக்கு வழிமாற்றப்பட்டு, பிறகு அங்கு தரையிறங்கியது.

குறிப்புச் சொற்கள்