தென்சீனக் கடலில் சீனா ராணுவ சுற்றுக்காவல்

1 mins read
92e6d8b1-4764-4320-b3cb-48230215bed8
தென்சீனக் கடற்பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) சீன ராணுவம் சுற்றுகாவல் பணியில் ஈடுபட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீன ராணுவம், தென்சீனக் கடலில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்சுக்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை மறுவுறுதிப்படுத்தினார். தென்சீனக் கடலின் பல பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடிவரும் வேளையில் அன்றைய தினமே அதன் ராணுவம் அங்கு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

பிலிப்பீன்ஸ், தென்சீனக் கடலில் கூட்டு சுற்றுக்காவல் நடத்த அடிக்கடி வெளிநாடுகளை ஈடுபடுத்துவதாகவும் அப்பகுதியில் சொந்தம் கொண்டாடுவதன் மூலம் சட்டவிரோதமாக நடந்துகொண்டு அவ்வட்டாரத்தில் நிலையற்ற சூழலை உருவாக்குவதாகவும் சீன ராணுவப் பேச்சாளர் ஒருவர் சனிக்கிழமை (மார்ச் 29) குற்றஞ்சாட்டினார்.

திரு ஹெக்செத், பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பெர்ட்டோ டியோடோரோவையும் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியரையும் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அந்நாட்டுத் தலைநகர் மணிலாவில் சந்தித்தார். திரு ஹெக்செத் ஆசியாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரத்துவப் பயணத்தின் முதல் அங்கமாக அவரின் பிலிப்பீன்ஸ் பயணம் அமைந்தது. அவர் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனையொட்டி வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பீன்ஸ் மூன்றும் தென்சீனக் கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை மேற்கொண்டன.

குறிப்புச் சொற்கள்