பெய்ஜிங்: அரியவகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை சீனா தற்காலிகமாக நீக்கியிருந்தது; இவ்வாண்டு நவம்பர் மாதம் நிறைவடையவிருந்த அந்த நீக்கம் இப்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சந்திப்பு நடத்தியபோது பெரிய அளவிலான ஒப்பந்தத்தை எட்டினர். அதன் ஓர் அங்கமாக இந்த அரியவகை கனிமக் கட்டுப்பாடுகளின் தற்காலிக நீக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சல அரியவகை கனிமங்களை ஏற்றுமதி செய்ய சீனா சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுப்பாடுகளை விதித்தது. பிறகு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அந்தக் கட்டுப்பாடுகளை அது விரிவுபடுத்தியது.
பின்னர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அந்தக் கட்டுப்பாடுகள் ஓராண்டு காலத்துக்கு நீக்கப்பட்டன. திரு ஸியும் திரு டிரம்ப்பும் சந்தித்துக்கொண்ட பிறகு அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டுப்பாடுகளின் தற்காலிக நீக்கம் வரும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரையிலான இரண்டு மாதகாலத்துக்கு நீட்டிக்கப்படுவதாக சீனாவின் வர்த்தக அமைச்சு அறிக்கை மூலம் திங்கட்கிழமை (நவம்பர் 9) அறிவித்தது. அது வேறு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை.
தான் விதித்த பல கட்டுப்பாடுகளையும் வரிகளையும் தற்காலிகமாக நீக்கப்போவதாக சீனா திங்கட்கிழமை அறிவித்திருந்தது. அதன் ஓர் அங்கமாக இந்த நீக்கமும் இடம்பெறுகிறது.
