ஞாயிற்றுக்கிழமை (மே 10) அதிகாலை 00.50 மணியளவில் ஈசூனில் உள்ள குடியிருப்பில் நிலத்தடிக் குழாய் பழுதடைந்து நீர் பெருக்கெடுத்து அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) சம்பவத்தை விசாரிப்பதோடு, அதன் தொழில்நுட்பப் பணியாளர்கள் அங்குச் சீரமைப்பு வேலைகளைச் செய்வதாகத் தெரிவித்துள்ளது.
ஈசூன் அவென்யூ 5, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புளோக் 101க்கு அருகே சம்பவம் நடந்தது.
செம்பவாங் ரோடு சந்திப்புக்கு அருகே கட்டடம் உள்ளதால் வெள்ளம் சாலையிலும் பெருக்கெடுத்ததாக பியுபி அதேநாள் காலை மணி 9.43க்கு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்குமான தண்ணீர் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று பியுபி உறுதி செய்தது.
நீ சூன் நகர மன்றத்துடன் இணைந்து அப்பகுதியைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கழகம் தெரிவித்தது.

