ரோம் உட்பட ஐந்து நகரங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை விடுத்த இத்தாலி

ரோம் உட்பட ஐந்து நகரங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை விடுத்த இத்தாலி

1 mins read
மனிதர்களால் இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன: நிபுணர்கள்
adc3cbf1-e86d-4b57-83f6-21d83ab8a10c
ரோம் நகரில் தொப்பிகளுடனும் குடைகளுடனும் வெயிலில் நிழல் தேடும் சுற்றுலாப் பயணிகள். - படம்: ஏஎஃப்பி

ரோம்/இத்தாலி: இத்தாலியின் சுகாதார அமைச்சு தலைநகர் ரோம் உட்பட ஐந்து நகரங்களில் வெப்ப அலை வீசும் என சிவப்பு நிற எச்சரிக்கைக் குறியீட்டை உயர்த்தியுள்ளது.

ரோம், ஃபுளோரன்ஸ், போலொனா, பிரெசியா, டூரின் ஆகிய நகரங்கள் அந்த ஐந்தில் அடங்கும்.

இவ்வாண்டில் முதன்முறையாக இத்தாலியில் விடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எச்சரிக்கை வெளிப்புறங்களில் வழக்கமாக பற்பல நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள், பாதுகாப்பாக இருந்துகொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

சூரியக் கதிர்களால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்த எச்சரிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ரோம் நகரின் முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் வியாழக்கிழமை (மே 28) பல சுற்றுலாப் பயணிகள் 32 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தடுமாறினர்.

இத்தாலியைவிட ஐரோப்பாவின் பிரிட்டனும் பிரான்சும் மிக வெப்பமான நாள்களை மே மாதத்தில் எதிர்கொண்டுள்ளன.

பிரிட்டன் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கடந்த சிலநாள்களில் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இயற்கை மாற்றத்துக்கு மனிதர்களே காரணம்

மனிதர்களின் தவறான செயல்களால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, வெப்ப அலை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்