கொடைக்கானல் நிலச்சரிவு: மத்திய அமைப்புகள் ஆய்வு

கொடைக்கானல் நிலச்சரிவு: மத்திய அமைப்புகள் ஆய்வு

படம்: இந்து தமிழ் திசை

30 Oct 2026 - 8:11 pm

2 mins read
மத்திய அரசின் புவியியல் ஆய்வு மையக் குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சோதனைகள் நடத்தினர்.
மத்திய அரசின் புவியியல் ஆய்வு மையக் குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சோதனைகள் நடத்தினர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த அக்டோபர் 23 முதல் 26ஆம் தேதிவரையில் பெய்த பெருமழையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

அதன்விளைவால் மலையிலிருந்து பாறைகள் சாலைகளில் விழுந்து, போக்குவரத்து பல பகுதிகளுக்குத் துண்டிக்கப்பட்டது. அங்கிருந்த பல சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கொடைக்கானலில் உள்ள பெருமாள்மலை - அடுக்கம் - பெரியகுளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மலைப்பாதையின் சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அங்கு வாகனப் போக்குவரத்து இயங்கமுடியாத நிலையில் முற்றிலும் அவை சேதமடைந்துள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தீவிர மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிலச்சரிவுக்கான காரணங்களைக் கண்டறிய மத்திய அரசின் புவியியல் ஆய்வு மையக் குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் சோதனைகளை நடத்திவருகின்றனர். அவர்களுடன் கொடைக்கானல் வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுகின்றனர்.

நிலச்சரிவு நடந்த இடங்களில் அது ஏற்பட்ட காரணம், மீண்டும் அதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள், செய்யப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளின் நிலை போன்றவற்றை அவர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

நிலச்சரிவு நிகழ்ந்த இடங்களில் அது ஏற்பட்டதன் காரணம், அது மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளின் நிலை போன்றவை குறித்து அந்த ஆய்வுகள் நடக்கின்றன.

நிலச்சரிவின் தீவிரத்தால், மலைகளில் இருந்த கிராமங்கள் தற்போது தனித்தீவுகள் போல தனித்து நிற்கின்றன. அண்மையில் தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மைக் குழுவும் கொடைக்கானலின் மலைப்பகுதிகளில் ஆய்வுகள் நடத்தியது.

அதன் முடிவில் குருசரடி, சவரிக்காடு, கோம்பைக்காடு போன்ற கொடைக்கானலுக்கு அருகில் உள்ள 15 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்