தாய்லாந்தில் தரவு நிலையங்களுக்குப் புதிய உச்சவரம்புகள்

தாய்லாந்தில் தரவு நிலையங்களுக்குப் புதிய உச்சவரம்புகள்

இரைச்சல், நீர்ப் பயன்பாட்டுக்கு உச்சவரம்புகள்
படம்: டிஆர்ஜி டேட்டாசென்டர்ஸ்

11 Nov 2026 - 9:41 am

1 mins read

பேங்காக்: தாய்லாந்தின் தரவு நிலையங்களில் இரைச்சல், நீர்ப் பயன்பாடு ஆகியவற்றுக்கான புதிய விதிமுறைகளுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் இடம்பெற்றுள்ள கட்டுமானத் துறை வளர்ச்சி காரணமாக பொதுமக்களிடையே கவலை எழுந்திருப்பதைத் தொடர்ந்து இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குள் சத்தத்தின் அளவு 70 டிபிஏ (dBA) அளவு தாண்டாதிருக்கவேண்டும் என்று அரசாங்கத் தரவு நிலைய நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. அதோடு, அப்பகுதிகளுக்கு அருகே வெப்பநிலை ஒன்றிலிருந்து இரண்டு டிகிரி செல்சியசுக்கு மேல் உயராமல் பார்த்துக்கொள்ளவும் அரசாங்கம் பரிந்துரைத்தது.

தரவு நிலையங்களைக் குளிராக வைக்க உதவும் நீரைத் தொடர்ந்து பயன்படுத்தி சோதனையிட்ட பிறகே அதை வெளியிடவேண்டும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்