தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கப்பல் மோதல்; மாறிமாறி குறைகூறும் சீனா, பிலிப்பீன்ஸ்

1 mins read
5d25722a-5cf3-4119-a535-c44c42008c9f
தென்சீனக் கடல் முழுவதும் தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோரிவருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் கப்பல் ஒன்று பிலிப்பீன்ஸ் அரசாங்கக் கப்பல்மீது மோதியுள்ளது.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) திட்டு தீவு அருகே நடந்ததாக மணிலா கடலோரக் காவற்படை தெரிவித்தது.

நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்த பிலிப்பீன்ஸ் கப்பல்மீது சீனக் கப்பல் வேண்டுமென்றே மோதியதாக அது குற்றஞ்சாட்டியது.

“காலை 9.15 மணிவாக்கில் சீனாவின் கடலோரக் காவல்படை கப்பல் பிலிப்பீன்ஸ் கப்பல்மீது தண்ணீர்க் குழாய்மூலம் நீரைப் பாய்ச்சி தாக்கியபின் அதன்மீது மோதியது,” என்று மணிலா கடலோரக் காவற்படை கூறியது.

இச்சம்பவத்தில் பிலிப்பீன்ஸ் கப்பலுக்குச் சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் கப்பலில் இருந்தவர்களுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. சீனப் பகுதிக்குள் இரண்டு பிலிப்பீன்ஸ் கப்பல் அத்துமீறு நுழைந்ததாகவும் அதனால்தான் மோதல் ஏற்பட்டதாக அது கூறியது.

தென்சீனக் கடலில் அடிக்கடி பிலிப்பீன்ஸ் மற்றும் சீனக் கப்பல்கள் மோதிக்கொள்கின்றன.

தென்சீனக் கடல் முழுவதும் தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோரிவருகிறது. இதற்கு அனைத்துலக அளவில் எதிர்ப்புகளும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்