மணிலா: பிலிப்பீன்சின் முன்னாள் மேயர் ஏலிஸ் குவோவிடம் அந்நாட்டின் காவல்துறை நடத்தி வரும் விசாரணை சிங்கப்பூர் வரை விரிவடைந்துள்ளது.
ஏலிஸ் குவோ பண மோசடி மற்றும் பிற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் பிலிப்பீன்ஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் காவல்துறை உதவி வருகிறது.
பிலிப்பீன்சின் இணையத்தள சூதாட்டக் குழுமத்தின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் சிங்கப்பூரரான ஷாங் ஜியே உள்ளிட்டவர்கள் அவரது நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிங்கப்பூர் காவல்துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது.
சீன நாட்டவர்கள் உட்பட வெளிநாட்டு சூதாட்டக்காரர்களுக்கு சேவை செய்யும் பிலிப்பீன்ஸ் சூதாட்ட நடத்துநர்களுக்கு சர்ச்சைக்குரிய குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஜூலை 2024ஆம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் தடை விதித்தார்.
பிலிப்பீன்சின் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பாளரால் மணிலாவில் தேடப்படும் ஷாங், மனிதக் கடத்தல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனத்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரில் குவோவின் மற்றொரு நண்பர் வூ டுவான்ரென் என்று கூறப்படுகிறது.
பிலிப்பீன்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரை அங்குள்ள பல சட்டவிரோத சூதாட்ட குழுக்களின் “முதலாளி” என்று வர்ணிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஷாங்குக்கு சிங்கப்பூரில் வீடு இருப்பதாகவும் சிங்கப்பூரில் பல நிறுவனங்களில் இயக்குநராக அவர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

