6 கால் நாய்க்கு அறுவை சிகிச்சை, புது வாழ்க்கை

6 கால் நாய்க்கு அறுவை சிகிச்சை, புது வாழ்க்கை

1 mins read
797475ad-94b8-480d-a099-827425cc4216
பிரபல கேலிப்படக் கடற்கன்னி கதாபாத்திரத்தின் பெயரான ‘ஏரியல்’ இந்தச் செல்ல நாய்க்கு சூட்டப்பட்டது. - படம்: ஃபேஸ்புக்

வேல்ஸ் பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் ஆறு கால்களுடைய நாய்க்குட்டி ஒன்று கைவிடப்பட்ட செய்தி, வாசகர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து, கூடுதலாக இருந்த அந்தப் பெண் நாயின் இரு கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

‘ஏரியல்’ என்ற பெயருடைய அந்தச் செல்லப் பிராணிக்கு அறுவை சிகிச்சை நடக்க வேண்டும் என்பதற்காக பல நாடுகளைச் சேர்ந்தோர் சுமார் £15,000ஐ (S$25,550) திரட்டினர்.

நாய்க்குக் கூடுதலாக இன்னொரு கருவாய் இருந்ததாகவும் ஒரே ஒரு சிறுநீரகம் இருந்ததாகவும் முதன்முதலில் ஏரியலைச் சோதித்த கால்நடை மருத்துவர் கண்டறிந்தார்.

இதையடுத்து, அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே ஏரியல் எழுந்து இங்குமங்கும் நடந்துகொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்ததாக மருத்துவர் கூறினார்.

மருத்துவமனையில் ஓய்வெடுத்த பின், தற்போது அதன் தற்காலிக வளர்ப்பு உரிமையாளரிடம் ஏரியல் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புது வாழ்க்கை அதற்கு ஆரம்பமாகிவிட்டது என்று நம்புவோம்!

குறிப்புச் சொற்கள்