சீனாவில் வெப்பம், கடும் மழை

1 mins read
87ac6150-82e3-42ec-925f-5536ed82c201
குவாங்சி மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லியுசுவோ நகரம். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டின் வானிலை அமைப்பு ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 16) எச்சரிக்கை விடுத்தது.

அதேவேளை, நாட்டின் தென் மாநிலங்கள் பலவற்றில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வட சீனாவிலும் யெல்லோ, ஹுவாய்ஹெ ஆறுகளுக்கு இடையில் உள்ள வட்டாரங்களிலும் வெப்பநிலையின் வீரியம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் தெரிவித்தது. சின்ஜியாங், இன்னர் மங்கோலியா, ஹெனான் ஆகியவற்றின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37லிருந்து 39 டிகிரி செல்சியசுக்கு இடையே பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாள்களாகக் கடும் மழை பொழிந்த ஃபூஜியான் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பல நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை திறந்துவிட்டதாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிசிடிவி ஊடகம் குறிப்பிட்டது. சீனாவின் குவாங்சி மாநிலத்தில் உள்ள சில ஆறுகளில் நீர்மட்டம் பெரிய அளவில் அதிகரித்தது என்றும் குய்லின் நகரில் மாணவர் ஒருவர் வெள்ளத்தில் மாண்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்