ஷாங்காய் டிஸ்னிலேண்ட்டில் உடற்குறை அல்லது நடக்க சிரமப்படுவோரே இனி சக்கர நாற்காலியைப் பயன்படுத்தலாம்

1 mins read
1d281181-2b23-48cf-b9df-6307e9378dca
ஷாங்காய் டிஸ்னிலேண்டிற்கு வருவோர், பூங்காவைச் சுற்றிப் பார்க்க மின்சார சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துகின்றனர். - படம்: XIAOHONGSHU

ஷாங்காய்: ஷாங்காய் டிஸ்னி ரிசோடில் உடற்குறையுள்ளோர் அல்லது நடமாடச் சிரமப்படுபவர்கள் மட்டுமே இனிமேல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தலாம்.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, உடற்குறை, முதுமை அல்லது மருத்துவ நிலைமை காரணமாக கைகளால் இயக்கும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

நடமாட்ட சிரமங்கள் உள்ளோர் மின்சாரத்தில் இயங்கும் சக்கர நாற்காலிகளை பூங்காவிற்குள் கொண்டு வரலாம். அதிகபட்ச வரம்பான ஆறு கிலோ மீட்டர் நடை வேகம், குறைந்தது மூன்று சக்கரங்கள் கொண்ட சக்கரநாற்காலிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த மாற்றங்கள் பூங்காவின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேநேரத்தில் நடமாட்டப் பிரச்சினையுள்ளவர்களுக்கு சிறந்த சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரிசார்ட் தெரிவித்துள்ளது.

நடப்பதில் எந்தச் சிக்கல் இல்லாதவர்களும் பூங்காவைச் சுற்றிப்பார்க்க தற்போது மின்சார சக்கரநாற்காலியைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்