கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரைக்கலாம்

கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரைக்கலாம்

2 mins read
7992f54a-dca5-4ed2-9afc-5ddbcdb68cb2
கவியரசு கண்ணதாசன். - படம்: ஊடகம்

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் எனப் பலதிறன் படைத்தவராக விளங்கி, அத்துறைகளில் எல்லாம் முத்திரை படைத்தவர் கவியரசு கண்ணதாசன்.

அவரது பெருமையைப் பறைசாற்றும் வகையில், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது.

மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது.

அவ்வகையில், இவ்வாண்டிற்கான விருதிற்குப் பொதுமக்களும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்.

விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைக்கதை வசனம் (தொலைக்காட்சி உட்பட), பாடல், ஊடகம் (பத்திரிகை உட்பட) ஆகிய எட்டுத் துறைகளில் ஏதாவது ஒன்றில் சிறந்த எழுத்துத் திறன் பெற்றவராக விளங்க வேண்டும்.

விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் 40 வயதிற்குக்கீழ் இருக்க வேண்டும். கண்ணதாசன் பிறந்த நாளான ஜூன் 24ஆம் தேதியுடன் வயது கணக்கிடப்படும். பரிந்துரைக்கப்படுபவரும் பரிந்துரைப்பவரும் சிங்கப்பூர்க் குடிமகனாகவோ நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை பேரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் செய்ய வேண்டும்.

பரிந்துரைக்கப்படுபவர், பரிந்துரை செய்பவர் ஆகியோரின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்.

பரிந்துரைகளை aavanna19@gmail.com அல்லது premapathi2303@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ, BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723 எனும் முகவரிக்கு அஞ்சல் மூலமோ 10-10-2024க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விருதுத் தேர்வுக் குழுவின் பரிந்துரையே இறுதியானது. வெற்றியாளருக்கு வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு: நா. ஆண்டியப்பன் - 9784 9105, பிரேமா மகாலிங்கம் - 9169 6996. www.singaporetamilwriters.com இணையத் தளத்திலும் விவரம் அறியலாம்.

குறிப்புச் சொற்கள்