காற்பந்து கலாட்டா: அரையிறுதிக்குத் தகுதிபெறும் குழுக்களை ஊகித்து, பரிசுகளை வெல்லுங்கள்

காற்பந்து கலாட்டா: அரையிறுதிக்குத் தகுதிபெறும் குழுக்களை ஊகித்து, பரிசுகளை வெல்லுங்கள்

2 mins read
8691bdab-4948-4df2-a75e-64f12b34487f
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சுவாரசியமான அம்சங்கள் குறித்து காற்பந்து கலாட்டாவின் மூன்றாவது வலையொளி அலசும். (இடமிருந்து) தமிழ் முரசின் நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை, செய்தியாளர் யுகேஷ் கண்ணன், உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம். - படம்: த. கவி

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2026 காலிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. 48 குழுக்களுடன் தொடங்கிய போட்டியில் எட்டுக் குழுக்கள் காலிறுதிச் செல்கின்றன. 40 குழுக்களின் உலகக் கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.

காற்பந்து உலகின் ஜாம்பவான்களான பிரேசில், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் போட்டியிலிருந்து வெளியேறியிருப்பது அவற்றின் ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

போர்ச்சுகலின் உலகக் கிண்ணக் கனவும் கலைந்துவிட்டது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அது பலம் பொருந்திய ஸ்பெயினிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியின் பிடியில் சிக்கிக்கொண்டது. இதுவே போர்ச்சுகலின் நட்சத்திர ஆட்டக்காரரான 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணம் என்று கூறப்படுகிறது. அவரால் கடைசி வரை உலகக் கிண்ணத்தை ஏந்த முடியாமல் போய்விட்டதே என்று உலகெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போட்டியை ஏற்று நடத்தும் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளும் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்கள் குறித்தும் இனி நடைபெற இருக்கும் ஆட்டங்கள் குறித்தும் தமிழ் முரசின் காற்பந்து கலாட்டாவின் மூன்றாவது வலையொளி அலசுகிறது.

போட்டியின்போது எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றியும் வலையொளியில் கலந்துரையாடப்படுகிறது. அமெரிக்க ஆட்டக்காரர் ஃபொலரின் பெலகன்னுக்கு காட்டப்பட்ட சிவப்பு அட்டைக்கான தற்காலிகத் தடை ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சை, அதன் காரணமாக எழுந்த அதிருப்திக் குரல்கள் குறித்தும் அதில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்களை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் காற்பந்து கலாட்டா வலையொளியைக் கண்டு களியுங்கள்.

அதுமட்டுமல்லாது, காற்பந்து கலாட்டா ரசிகர்களுக்கு போட்டியும் இடம்பெறுகிறது. போட்டியில் வெல்பவர்களுக்குப் பரிசுள் காத்திருக்கின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பிரான்ஸ், மொரோக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, நார்வே, அர்ஜென்டியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்த எட்டு நாடுகளில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு நாடுகளைச் சரியாக ஊகிக்கும் மூவருக்கு தலா $50 பெறுமானமுள்ள ‘டிகெத்தலான்’ பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

சரியான குழுக்களை ஊகிப்போரின் எண்ணிக்கை மூன்றுக்கும் அதிகமான இருந்தால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்பு வெளியிடப்படும் காற்பந்து கலாட்டாவின் அடுத்த வலையொளியின்போது குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வெற்றியாளர்களுடன் தமிழ் முரசு தொடர்புகொள்ளும்.

போட்டியில் பங்கெடுக்க https://tinyurl.com/TM-WorldCup எனும் இணைய இணைப்பில், படிவத்தைப் பூர்த்தி செய்து விடைகளை வியாழக்கிழமை (ஜூலை 9) இரவு 9 மணிக்குள் அனுப்பவும்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துக் கலாட்டாஉலகக் கிண்ணம்வலையொளிகாற்பந்து