முன்னாள் மத்திய அரசு அதிகாரி, எம்எல்ஏக்கள், நீதிபதி, தவெகவில் ஐக்கியம்

1 mins read
b405dce1-cf7f-42ee-836b-f3ec0c4822a3
விஜய், முன்னாள் அதிகாரி அருண்ராஜ். - படம்: ஊடகம்

சென்னை: முன்னாள் வருவாய்த் துறை அதிகாரி, முன்னாள் நீதிபதி, திமுக, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

முன்னாள் அதிகாரி அருண்ராஜ் தவெகவின் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், ஶ்ரீவைகுண்டம் தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன், வால்பாறை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஶ்ரீதரன், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை டாக்டர் மரிய வில்சன், மயிலாப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

“தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்டமைப்பு, தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்,” என கட்சித் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்