வேலை வாய்ப்புகளைப் பெற ஒரே இடத்தில் தீர்வு: தினேஷ்

வேலை வாய்ப்புகளைப் பெற ஒரே இடத்தில் தீர்வு: தினேஷ்

2 mins read
பிரதமர் விவரித்த சிங்கப்பூர் உணர்வின் முக்கியத்துவத்தைத் திரு தினேஷ் வாசு தாஸ் வலியுறுத்தினார்.
cde73c0e-1fa0-4df2-8268-17eeb0a5f5af
வரவுசெலவுத் திட்டம் 2026 குறித்து தமிழ் முரசின் சிறப்பு நேர்காணலில் தமது கருத்துகளைப் பகிர்ந்தார் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (இடது). - படம்: த. கவி

திறன்களை மேம்படுத்துவதற்கும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஒரே இடத்தில் தீர்வுகளைக் காணலாம் என்று கூறினார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் அமைச்சுகளுக்கான துணையமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ்.

பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த வியாழக்கிழமை அறிவித்த வரவுசெலவுத் திட்டத்தில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் இணைக்கப்பட்டு புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். அந்த அமைப்பைக் கல்வி அமைச்சும் மனிதவள அமைச்சும் இணைந்து வழிநடத்தும்.

வரவுசெலவுத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அதை வருணித்த திரு தினேஷ், ஊழியர்களுக்கு மிகுந்த பலன் தரும் அம்சம் அது எனக் குறிப்பிட்டார்.

வரவுசெலவுத் திட்டம் 2026 குறித்து தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மதுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தமது கருத்துகளைப் பகிர்ந்தார் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (இடது).
வரவுசெலவுத் திட்டம் 2026 குறித்து தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மதுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தமது கருத்துகளைப் பகிர்ந்தார் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (இடது). - படம்: த. கவி

தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு நேர்காணில் பேசிய திரு தினேஷ், குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களை மனத்தில் வைத்து திட்டங்கள் வரையப்பட்டுள்ளன என்றார்.

உள்ளூர் தகுதிச்சம்பளம் $1,600லிருந்து $1,800க்கு உயர்த்தப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்மூலம் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Watch on YouTube

ஒரு குடும்பம் வேலையில் நீடித்திருப்பது அல்லது சேமிப்பை உயர்த்துவது போன்ற முன்னேற்றங்களைக் காட்டும்போது, அவர்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். அதனால், ‘லைஃப் கோச்’ போன்ற ஆதரவாளர் உதவியை நாடி முன்னேற்றம் பெற அவர் வலியுறுத்தினார்.

வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் பிரதமர் விவரித்த சிங்கப்பூர் உணர்வின் முக்கியத்துவத்தைத் திரு தினேஷ் வலியுறுத்தினார்.

உலகின் பல நாடுகளில் இனம், மொழி, சமயம் போன்ற வேறுபாடுகளால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் சிங்கப்பூரில் நாம் எப்போதும் பல இன நாடாக இருப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இனங்களுக்கும் மொழிகளுக்கும் சமயங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த ‘நாம் முதல்’ என்ற பிரசாரத்தை சிங்கப்பூர் தொடங்க உள்ளதை அவர் குறிப்பிட்டார்.

சமூகத்திலிருந்து வரும் நல்ல திட்டங்களை மேம்படுத்த ‘எஸ்ஜி பங்காளித்துவ நிதி’ மூலம் அரசாங்கம் ஒதுக்கியுள்ள $50 மில்லியன் திட்டத்தை அரவணைத்துச் சமூகம் பலன் பெறவும் திரு தினேஷ் ஊக்குவித்தார்.

குறிப்புச் சொற்கள்