சாயாசிங்: அசத்துகிறார் தனுஷ்

'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பின்போது தேர்ந்த, அனுபவம் வாய்ந்த இயக்குநர் போல் தனுஷ் செயல்பட்டதாகப் பாராட்டு கிறார் நடிகை சாயாசிங். சுப்பிரமணியன் சிவா இயக்கத்தில் உருவான, 'திருடா திருடி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அதில் இடம்பெற்ற 'மன்மத ராசா...' பாடலுக்கு இருவரும் ஆடிய நடனம் ரசிகர்களால் சுலபத்தில் மறக்க முடியாதது. தனுஷ் தற்போது இயக்கு நராகவும் அவதாரம் எடுத்தி ருக்கிறார். 'பவர் பாண்டி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சாயாசிங்குக்கும் நடிக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாயாசிங் கூறும்போதே, தனுஷைப் புகழ்ந்து தள்ளினார். "தனுஷ் சிறந்த நடிகர். இப்போது நல்ல இயக்குநர் என்பதையும் நிரூபிக்கப் போகிறார். "'திருடா திருடி' இயக் குநர் சுப்பிரமணியன் சிவா தான் என்னை 'பவர் பாண்டி' படத்துக்குப் பரிந்துரை செய்தார். ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதிய தனு‌ஷும் என்னை ஒப்பந்தம் செய்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!