80 வயது ஓட்டுநரின் கார் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்துக்குள் புகுந்தது

மெர்சிடிஸ் கார் ஒன்றை ஓட்டிச் சென்ற 80க்கும் அதிக வயதுள்ள ஓர் ஆடவர், வாகனத்தின் கட்டுப் பாட்டை இழந்து சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள ஓர் உணவகத் தில் காரை மோதிவிட்டார். சம்பவத்தில் கார் ஓட்டியவருக்கு காயம் ஏதுமில்லை. அந்தக் கார், நியூ மெஜஸ்டிக் ஹோட்டல் எதிரே உள்ள இரண்டு மாடி கடைவீடு ஒன்றில் மோதி யது என்று 38 வயது டாக்சி ஓட்டுநரான ஃபாருக் அலி என்ற வாசகர் தெரிவித்ததாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று கூறியது. இந்தச் சம்பவம் 46, புக்கிட் பாசோ ரோட்டில் நேற்று முற்பகல் 11.10 மணிக்கு நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. உதவி தேவை என்று கேட்டு தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்ததாகவும் உடனே குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்பு வண் டிகளையும் மருத்துவ வண்டி யையும் ஆதரவு வாகனங்களை யும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பியதாகவும் இந்தப் படை யின் பேச்சாளர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

பாதிக்கப்பட்ட இத்தாலிய உணவகம் இன்று மூடப்பட்டிருக் கும். சம்பவம் நடந்தபோது உணவ கம் மூடப்பட்டிருந்து. ஆனால் ஊழியர்கள் உள்ளே இருந்தனர். "என் கண்முன்னால் நடந்த சம்பவத்தைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்," என்று பாதிக்கப்பட்ட ஓசோ உணவகத் தின் குமாரி கலி செராஜ்டோ கூறினார். சம்பவம் நடந்தபோது அவர் டாக்சியில் அங்கு வந்து கொண்டிருந்தார். "டாக்சியில் இருந்து இறங்கிய தும் நான் நேரே கட்டடத்துக்குள் சென்றேன். மிக வேகமாக அது நடந்துவிட்டது. புகை ஏற்பட்டது," என்றார் அவர். சம்பவத்தைத் தொடர்ந்து ஊழி யர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேறியதாக உணவக இயக் குநர் திரு டிகோ சியாரினி தெரிவித்தார்.

சைனாடவுன் வட்டாரத்திலுள்ள உணவகத்தில் மோதி நிற்கும் மெர்சிடிஸ் கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!