அனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி

சாங்கி விமான நிலையத்தில் புதி தாக அமையவுள்ள பொழுது போக்கு, கடைத்தொகுதியான ‘ஜுவலி’ல் 40 மீட்டர் உள்ளரங்கு நீர்வீழ்ச்சி, தரையிலிருந்து 23 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள தொங்கு பாலம், என பல சிறப்புப் பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஜுவல் கட்டத்தின் உயர் மாடியில், கிட்டத்தட்ட 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதாவது 11 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவில் உருவாகும் கனோபி பூங்காவில் இவை இடம்பெறுகின் றன. கண்ணாடித் தரையுடன் 50 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் தொங்கு பாலம் இதன் மற்றொரு சிறப்பு. இங்கு இடம்பெறும் இந்த பாலத்தில் செயற்கை முகில்களுக் கிடையே நடக்கலாம்.

நீர்வீழ்ச்சியில் இரவு நேரத்தில் ஒலி, ஒளி காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பிரபலமான கட்டட வடிவமைப் பாளர் மொசே சாஃப்டியின் வடிவ மைப்பில் சாங்கி விமான நிலையத் தின் முனையம் 1ல் அமைக்கப்பட்டு வரும் ஜுவல் 2019ஆம் ஆண் டின் தொடக்கத் தில் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 134,000 சதுர மீட்டர் பரப்பளவில் தனித் தன்மை யான அரை வட்ட வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் கண்ணாடிகளாலும் இரும்பாலும் கட்டப்பட்டு வருகிறது.

வானத்திலிருந்து ஒரே இடத்தில் மழை கொட்டுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஜுவல் பொழுதுபோக்கு, கடைத்தொகுதியில் பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று சொல்லப்படுகிறது. படம்: ஜுவல் சாங்கி விமான நிலையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

தற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும்  போலிசார் கூறினர். படங்கள்: ஊடகம்

06 Dec 2019

மருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்