கம்ஃபர்ட் டெல்குரோவின் லாபம் குறைந்தது

போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனமான கம்ஃபர்ட் டெல்குரோவின் இரண்டாம் காலாண்டு லாபம் 5.5% குறைந்தது. கடந்த ஜூன் 30ஆம் தேதி முடிந்த இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர வருமானம் $75 மில்லியன்.

பங்குச் சந்தையில் பட்டியலில் இடம்பெறும் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்தின் இரண்டாம் காலண்டின் மூன்று மாத கால மொத்த வருமானம் 5.4 விழுக்காடு அதிகரித்து $941.1 மில்லியனாக இருந்தபோதிலும் செலவினங்கள் உயர்ந்ததால் அதன் லாபம் குறைந்துள்ளது. அதனுடைய பிரதான சேவை யான டாக்சி சேவை, மற்ற தனியார் துறை போக்குவரத்து சேவை யாளர்களின் போட்டித் தன்மையால் பாதிப்படைந்து வருகிறது.

இரண்டாம் காலாண்டில் டாக்சி சேவையும் வாகன பொறியியல் பிரிவும் இணைந்து $39.7 மில்லியன் லாபமீட்டின. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட 20.4 விழுக்காடு குறைவு. முதல் காலாண்டில் கம்ஃபர்ட் டெல்குரோவின் நிகர லாபம் 12.7 விழுக்காடு குறைந்து $141.3 மில்லியனானது. வருமானம் வளர்ச்சி 3.2 விழுக்காடு வளர்ச்சி கண்டு $1,819.9 மில்லியனானது.

ஆண்டுக்காண்டு அடிப்படை யில் லாபம் குறைந்திருந்தாலும், முதல் காலாண்டைவிட இரண் டாம் காலாண்டு சிறப்பாக இருப்ப தாக கம்ஃபர்ட் டெல்குரோவின் தலைமை நிர்வாகி யாங் பான் சென் கூறியுள்ளார். பேருந்து, ரயில் சேவைத் துறை யின் தொடர்ச்சியான வளர்ச்சியும் சிங்கப்பூரில் டாக்சி சேவைத் துறை நிலைப்படுத்தப் பட்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணம் என்று திரு யாங் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!