‘அரசன்’ படத்தால் சிம்புவுக்கு நெருக்கடி

நடிகர் சிம்பு மீது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 'பேஸ்சன் மூவி மேக்கர்ஸ்' சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தது. "நடிகர் சிம்புவை நாயகனாக வைத்து 'அரசன்' படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தோம். இதற்காக அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி முன் பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தார். அவர் சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவரிடம் இருந்து பணத்தைத் திரும்ப பெற்றுத் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந் தது. இந்த மனு நீதிபதி மெ.கோவிந்த ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்பு நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்க வாங்கிய முன்பணம் ரூ.50 லட் சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தப் பணத்தை நான்கு வாரங்களில் அவர் செலுத்த வேண் டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டிலுள்ள பொருட்களான ரெப்ரிஜி ரேட்டர், தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர் கண்டிஷனர், டைனிங் டேபிள், நாற்காலிகள் ஆகியவை கையகப்படுத்தப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் சிம்புவுக்குச் சொந்தமான கார், கைத்தொலைபேசிகள் ஆகிய வற்றையும் கையகப்படுத்தலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக சிம்பு தரப்பில் வாதிடுகையில், "குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு தொடங்காத தால் தனக்கு இழப்பு ஏற்பட்ட தாகவும் இதனால் முன்பணத்தைத் திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். சிம்பு தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுந்தர்.சி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோருடன் இணைந்து வெவ்வேறு படங்களுக்குத் திட்ட மிட்டு வருவதாகக் கூறப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!