தீபாவளி கொண்டாட்டங்கள் அதிகாரபூர்வ தொடக்கம்

தீபாவளிக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் வேளையில் குதூகலத்தில் திளைத்திருக்கும் லிட்டில் இந்தியா வட்டாரம் நேற்று மாலை தீபாவளிக் கொண்டாட் டங்களை பிரம்மாண்டமாக வர வேற்றது. இக்கொண்டாட்டத்திற்கான தீபாவளி ஒளியூட்டு விழா சிராங்கூன் பிளாசாவிற்கு எதி ரில் உள்ள திடலில் நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துகொண்ட அதிபர் டோனி டான் கெங் யாம் இரவு 8 மணியளவில் ஒளியூட்டி கொண் டாட்டங்களை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

ஒளியூட்டு நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் ஆடல், பாடல் படைப்புகள் வந்திருந்தோரை மகிழ்வித்தன. லிட்டில் இந்தியா கடைக்காரர் கள் மரபுடைமைச் சங்கம் (லிஷா) இந்து அறக்கட்டளை வாரியம், இந்திய ஆலயங்கள் சங்கம் மற்றும் இந்திய அமைப்புகளின் சார்பில் அதிபர் சவால் அறநிதிக்கு $100,000 நன்கொடை வழங்கப் பட்டது. மேலும், சிராங்கூன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சிண்டாவுக்கு சுமார் $56,000 நன்கொடை வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ஒளியூட்டு விழாவைக் கண்டு ரசித்தனர். கடந்த 1998ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற ஒளியூட்டு விழாவை லிஷா நடத்தி வருவதாக அதன் தலைவர் ராஜ்குமார் சந்திரா தெரிவித்தார்.

பல வண்ண அலங்காரங்கள் ஒளிவெள்ளமாகப் பாய்ந்து சிராங்கூன் சாலையில் இரவுப் பொழுதைப் பகல்போல மாற்றி உள்ளன. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டின் அலங்காரம் ஏராளமான மக்களைக் கவர்ந்துள்ளது. மயில்களும், தாமரை மலர்களும் அலங்கார விளக்குகளாக மாறி காட்சி அளிக்கின்றன. ஒளிவெள்ள அலங்காரத்தில் மின்னும் சிராங்கூன் சாலையின் முகப்புத் தோற்றம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next